தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

 

 

வள்ளர்பெருமான் இராமலிங்க சுவாமிகள் அருளிச் செய்த சன்மார்க்கம் ( சத் + மார்க்கம் )


( அருட் பெருஞ்ஜோதியை அறிவது எப்படி )


வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் போதித்த சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை அறியவும் அனுஷ்டிக்கவும் தவறிய சன்மார்கிகளுக்கு ஓர் அறிய தகவல்.


சன்மார்க்க வழிகாட்டி


வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த சன்மார்க்கம் ( சத் + மார்க்கம் )


பூ உலகில் மனித இனம் அழிவை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டுள்ளது. அனைத்து சமயங்களும் மனித இனத்தை உய்விக்க வந்ததாக வாயளவில் சொல்கிறார்கள். ஆனால் அனைத்துச் சமய நூல்களும் மாற்றுச் சமயத்தவரை கொன்று அழிக்கவேண்டும் என்று அவர்களது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதனை இவர்கள் கற்பித்த கற்பனையான கடவுளின் ஆணை எனவும்கூறுகிறார்கள்.

மாற்று மதத்தினரை கொல்வது கடமையாக்கப் பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தலைமையிலும், பாகிஸ்தான், ஈரான் தலைமையில் இஸ்லாமிய மக்களும் ஒன்று திரண்டு மதப்போருக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. விளைவு அனுயுத்தம், முடிவு மனித இனம் கூண்டோடு அழிந்து போகும். தன்னைத் தானே அழித்துக்கொள்ள சமயங்கள் வழி காட்டுகின்றன. கற்பனையான சமயங்களையும், கடவுள்களையும், நிராகரிப்பதே மனித இனம் வாழ ஒரே வழி. உலக மக்கள் ஒரு தாய் மக்கள் அதுவே சன்மார்க்கம். சன்மார்க்கமே மனித இனத்தைக் காக்க கூடிய வல்லமை கொண்ட ஒரே தத்துவமாகும். ஆகவே வள்ளலார் அருளிச் செய்த சன்மார்க்கத்தை படித்து பயன் பெறுங்கள்.